இளம் சமுதாய இளஞர்களை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கின்றது என பேசி திருமாவளவன் நம்பிக்கை ஊட்டினார்.
அரக்கோணம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அந்த சமூகத்து இளம் தலைமுறைகளை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு இருக்கிறது. செய்வோம்..! ஓட்டு போட்டாலும் போடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் விடுதலைக்காக போராடுகின்ற இயக்கம்தான் விடுதலை சிறுத்தை கட்சி.
தேர்தல் களம் முடிந்த சூடு இன்னும் ஆறவில்லை, நான்கு நாள் கூட ஆகவில்லை ,போராட்ட களத்தில் நிற்கிறோம் அதுதான் விடுதலை சிறுத்தை கட்சி. சரி விடுங்கள் எதோ குடிகாரன் அடித்து விட்டார்கள் என்று ஜனங்களுக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு, கையில் இருப்பதை கொடுத்து விட்டுப் போய் இருக்கலாம்…. விடுதலைச் சிறுத்தைகள் அப்படி போக மாட்டோம். எந்த இடத்திலும் நீத்து போக மாட்டோம். தேர்தல் அரசியல் எங்களை நீத்து போக செய்யாது.
தேர்தல் களத்தில் இருந்தாலும் விடுதலைச்சிறுத்தைகள் வீரியம் குன்றாமல் புரட்சியாளர் அம்பேத்கர் பாதையில் நடக்கக் கூடியவர்கள்… போராட்டக்களத்தில் நிற்கக் கூடியவர்கள்… சூர்யாவையும், அர்ஜுனனையும் படுகொலை செய்த அந்த சம்பவத்தை எப்படி நாங்கள் கடந்து போக முடியும் என திருமாவளவன் பேசினார்.