செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் பகுதியில் மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல் சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் .
விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.