பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி திரையுலகில் வலம் வந்தவர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தார். கச்சேரியில் பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் எஸ்.பி.பி பாடி வந்தார். இவர்கள் இருவருக்கும் பலவருட நட்பு இருந்தது. இந்நிலையில் ஷோக்களில் பாடும் பாடகர் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமென பாடகர்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அது எஸ்.பி.பிக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.
அப்போது பல கச்சேரிகளை கமிட் செய்திருந்த எஸ்.பி.பி செய்வது அறியாமல் இருந்தார். என் பாட்டை மற்றவர்கள் பாட கூடாது என நினைத்தவர் இசைஞானி இளையராஜா. மேலும் என் பாடலை பாடுவதற்கு காசு வேண்டும் எனவும் கேட்ட இளையராஜாவின் இந்த கருத்தை எதிர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மேடையில் தட்டிக் கேட்டார். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடல்களை எஸ்.பி.பி தான் பாடியுள்ளார். படத்தின் வெற்றிக்கும் எஸ்.பி.பி பாடல்களை முக்கிய காரணமாக இருக்கும் படையப்பா, முத்து, அருணாச்சலம், சந்திரமுகி என ரஜினியின் பல்வேறு வெற்றிப் படங்களில் எஸ்.பி.பி பாடல் கண்டிப்பாக இடம்பெற்றது
அதன்பின் ராயல்டி நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். எஸ்.பி.பி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அமைப்புகளிடம் இளையராஜாவுக்குறிய ராயல்டியை கொடுக்குமாறு கேட்டுக் கேட்டுக் கொண்டார். அதன்பின் இளையராஜாவின் பாடல்கள் எஸ்.பி.பி பாடத் தொடங்கி பிரச்சினை சுமுகமாக முடிந்துள்ளது.