Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செய்ய மறந்த செயல்….. 1 நாளுக்கு 3 தடவை செய்தால் போதும்…. 40% நோயை கட்டுப்படுத்தும்…..!!

உப்பின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

நம் வீட்டில் இருக்கக்கூடிய சமைப்பதற்கு பயன்படும் உணவுப் பொருட்கள் அனைத்திலும், ஒரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இது நம் தமிழ் பாரம்பரிய உணவின் சிறப்பு. மஞ்சளுக்கு மருத்துவ குணம்  இருப்பதை போலவே, நாள்தோறும் உணவில் சேர்த்து வர கூடிய உப்பிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 3 தடவை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றை 40 சதவிகிதம் வரை தடுக்க முடியும்.

மேலும் உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அடர்த்தியில் இருப்பதால், திசு சவ்வுகளின்  வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கிறது. இதனால் மேலும் சளி உருவாகாமல், தொண்டை புண்ணையும் குணமாக்குகிறது. அதேபோல் பற்களின் ஈறுகள் பகுதிகளிலும், கடவாய் பல்லின் கடைசி ஈறு பகுதியிலும் பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படும் தொற்றையும், பால்பற்கள் ஏற்படுத்தும் காயத்தையும் குணப்படுத்துவதில் உப்பு சிறப்பாக செயல்படுகிறது. நீரில் உப்பை போட்டு அடிக்கடி கொப்பளிக்கும் பழக்கம் முன்பெல்லாம் உண்டு. நாம்தான்  இப்ப அதை மறந்துவிட்டு பல தொற்று  நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். 

Categories

Tech |