செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் செங்கம் குப்பநத்தம், கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பியதை தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணைகளில் இருந்து செய்யாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதன் காரணமாக கரையோரம் இருக்கும் மக்கள் யாரும் ஆற்று பக்கம் வர வேண்டாம் எனவும் கால்நடைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது.