Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்து காட்டும் முதல்வர்…. இவரே உண்மையான விவசாயி…. அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்….!!!

முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், இன்னும் 100 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும். நான் ஒரு விவசாயி என்று வார்த்தையில் சொல்லிக் கொண்டால் போதாது. நாலரை லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்திருந்தார்கள்.

கடந்த காலங்களில் மின்மிகை மாநிலம் என்று கூறிக் கொண்ட நிலையில் மின்மிகைமாநிலம் என்றால் நாலரை லட்சம் விவசாயிகள் ஏன் பதிவு செய்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியிலும் தமிழக மின்சார வாரியத்தின் சூழல் மிக மோசமாக இருந்த நிலையிலும் கூட கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவேன் என்று பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பை வழங்கியே தீருவேன் என்று கூறிய நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலினை தான் உண்மையான விவசாயி. விவசாய என்பது வெறும் வார்த்தை அல்ல. செயலில் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |