செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். திருவள்ளுவர் சிலைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள். திராவிட கட்சிகள் தூய தமிழில் பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்கள் என்றார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர் நான் யாரையும் பயமுறுத்த வில்லை. அச்சமடைய வைக்கவில்லை என்றும் ,தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பின் ஆத்திரமடைந்த அவர் சத்தமாக கத்தினார். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜகவினர் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.