Categories
தேசிய செய்திகள் பல்சுவை

செம ஹேப்பி நியூஸ்….! ரயில்களில் பெண்களுக்கு ஸ்பெஷல்….. இனி ஜாலியா போகலாம்….!!!!!

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வெகு தூரம் பயணம் செய்யும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வெகு தூரத்திற்கு ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் பயணிப்பதற்காக பெண் பயணிகளுக்கு தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும்.

அதன்படி நெடுந்தூரம் பயணிக்கும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆரு Sleeper class பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதேபோல 3AC Class பெட்டிகளில் பெண்களுக்கு 6 பெட்டிகள் ஒதுக்கப்படும். இதற்கு பெண் பயணிகளுக்கு எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. தனியாக வந்தாலும் மற்ற பெண்களுடன் குழுவாக வந்தாலும் இந்த ஒதுக்கீட்டில் பயணிக்க முடியும். பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போக ரயிலில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு மாறுபாடு ஏற்படும்.  என்றும் தெரிவித்துள்ளார்

Categories

Tech |