Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்…. திரையரங்குகளில் 100% அனுமதி…. கர்நாடக அரசு அதிரடி….!!!!

கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கி திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முந்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உட்பட உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் நூறு சதவீத இருக்கைகளை பயன்படுத்தி தியேட்டர்கள் நடத்த அனுமதி அளிப்பது குறித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து மந்திரி சுதாகர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா 3-வது அலை தொடங்கியதை அடுத்து இந்த வருடம் கட்டுப்பாடுகள் கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் 50 சதவீதம் மட்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

 

Categories

Tech |