இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டைலான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . 80-களில் இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது 80-களில் இளையராஜா வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது பாரீஸில் எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும் எப்போதும் வெள்ளை வேஷ்டி, ஜிப்பாவில் இருக்கும் இளையராஜா கலர் கோட், பேண்ட், கேப் என ஸ்டைலான உடையில் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.