Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலாக நடனமாடிய கவின், தேஜூ… பாட்டு பாடி அசத்திய சிவாங்கி… இணையத்தை கலக்கும் ‘அஸ்கு மாரோ’ பாடல் வீடியோ…!!!

கவின், தேஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்கு மாரோ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் கவின், தேஜூ அஸ்வினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்கு மாரோ’ மியூசிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

ஒரு பப் செட்டப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் கவின், தேஜூ அஸ்வினி மற்றும் சிவாங்கி ஆகியோர் செம ஸ்டைலாக நடனமாடி அசத்தியுள்ளனர். இந்த பாடலை சிவாங்கி, தரண் குமார் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் . டாங்கில் ஜம்போ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் . மேலும் இந்தப் பாடலை ‘ஒரசாதே’ பாடலை எழுதிய கு.கார்த்திக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்த பாடல் தற்போது  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Categories

Tech |