வலிமை திரைப்படத்தை பார்த்த ஒருவர் இணையதளத்தில் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது “வலிமை” திரைப்படம். எச் வினோத் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்தவர் ஒருவர் இந்த படத்தின் விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் ” வலிமை படக் குழுவினருடன் இணைந்து திரைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த படம் மிஷன் இம்பாசிபிள் மற்றும் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் படங்களின் இந்திய பதில், விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. மேலும் போனி கபூருடன் த்ரில்லர் காட்சிகள், உங்கள் மூச்சை உங்களிடமிருந்து அடித்து செல்லும். புஷ்பா படம் ஆரம்பம் என்றால் வலிமை திரைப்படம் கிளைமாக்ஸ்” என குறிப்பிட்டிருந்தார்.