பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபி குத்து’ பாடலின் போஸ்ட்டரை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் நடிகரான விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்த ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த அதிரடி கலந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் கட்டாயமாக வெளியிடுவோம் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
#ArabicKuthu to rule your playlist from tomorrow!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast #ArabicKuthuFromTomorrow #BeastFirstSingle pic.twitter.com/6b8gNcmebJ
— Sun Pictures (@sunpictures) February 13, 2022
இவ்வாறு இருக்க பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபி குத்து’ பாடல் இன்று வெளியாகப் போவதாக படக்குழுவினர்கள் ப்ரோமோவுடன் அறிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து ரொமான்டிக்காக நடனமாடிய ‘அரபி குத்து’ பாடலின் போஸ்டரை சன் பிக்சர் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரகிகர்களிடம் வைரலாகி பரவி வருகிறது.