நடிகை வாணி போஜன் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதை தொடர்ந்து இவர் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதன் பின் இவர் லாக்கப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
— Vani Bhojan (@vanibhojanoffl) July 24, 2021
தற்போது நடிகை வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்டைலிஷ் உடையில் வாணி போஜன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.