குக் வித் கோமாளி ரித்திகா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் சீரியல் நடிகை ரித்திகா வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். இவர் நிகழ்ச்சியில் வந்த சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இவர் சில செலிப்ரேஷன் சுற்றுகளில் கலந்துகொண்டு அசத்தினார்.
https://twitter.com/tamilrithika/status/1387413398846001154
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரித்திகாவும் கோமாளி பாலாவும் சேர்ந்து செய்த ரைமிங் காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் ரித்திகா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. எப்போதும் புடவையில் அசத்தும் ரித்திகா தற்போது மார்டன் உடையில் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.