Categories
தேசிய செய்திகள்

செம நியூஸ்..! அனைத்து கொரோனா வைரசுக்கும் ஒரே தடுப்பூசி…. சூப்பர் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனா வைரஸின் அனைத்து வகை உருமாற்றங்களையும் தடுப்பதற்கு புதிய வகை தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள காசி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி  நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து கொரோனா வைரஸின் அணைத்து உருமாற்றத்தையும்  தடுக்கும் வகையில் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இனிமேல் கொரோனா வைரஸ் எந்தவித மாற்றத்தை அடைந்தாலும் அதனைத் எதிர்த்து இந்த தடுப்பூசி செயல்படும் என்று உறுதியளித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் அபிஸ்கோவேக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை வைத்து உருவாக்கியுள்ளார்கள். இந்த தடுப்பூசி மிகவும் பாதிப்பு தரக்கூடிய 6 வகை வைரஸ் குடும்பங்களைச் சேர்ந்த வைரஸ்களை எதிர்த்து செயல்படும்.

மேலும் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நிலைத்தன்மை கொண்டது என்று  பார்த்தசாரதி சென் குப்தா, சுப்ரபாத் முகர்ஜி, சரோஜ் குமார் பாண்டா, மலாய் குமார் ராணா, அபிக்யான் சவுத்ரி போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். தடுப்பூசியின் அடுத்த கட்டமாக தயாரிப்பு, மற்றும் பரிசோதனை தொடங்கப்படும். அபிஸ்கோவேக் தடுப்பூசியை இதுவரை எவரும் கண்டுபிடிக்கவில்லை.

கொரோனாவை போன்ற வைரஸ்களை எதிர்த்து செயல்படும் ஒரே தடுப்பூசி இதுதான். மேலும் ஆராய்ச்சியாளர்கள் முதலில் ஸ்பைக் புரோட்டீனில் பாதுகாப்பு இடத்தை கண்டுபிடித்தனர் அதில் சில மாறுபாடுகள் மட்டுமே அடைகிறது என்று கூறினார்கள். இந்த புரோட்டீன் மனித உடலில் வைரஸ்களின் தாக்குதலை எதிர்த்து செயல்படும் நோய் எதிர்ப்பு திறனை அதிக அளவில் தருகின்றன. இதனால் வைரசுக்கு எதிரான பாதுகாப்பு அளிக்க முடியும். கொரோனா தோற்று  பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்த பட்டதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Categories

Tech |