நடிகை பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.