சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Finally, its a wrap. Thnx to my wonderful team! @SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi@thisisysr@kalyanipriyan@iam_SJSuryah@Premgiamaren@ACTOR_UDHAYAA@Anjenakirti@MahatOfficial @manojkumarb_76 @Richardmnathan@UmeshJKumar @silvastunt@johnmediamanagr
#Maanaadu pic.twitter.com/KIKYUlP0Gb— sureshkamatchi (@sureshkamatchi) July 9, 2021
இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. மேலும் இதனை படக்குழுவினர் அனைவரும் கேக் வேட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.