Categories
தேசிய செய்திகள்

செம குட் நியூஸ்..! இனி கிராமங்களிலும்…. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…!!!

பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் மத்திய அரசின் சுகாதார அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் அப்போது: “சுகாதாரத்துறை மற்றும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக பட்ஜெட்டில்  3 காரணிகளால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை அதிகரித்தல், ஆராய்ச்சி ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய மூன்று காரணிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்காக நமது குழந்தைகள் சிறிய நாடுகள் செல்கின்றன. அங்கு மொழி பிரச்சினை இருந்தாலும் அவர்கள் தொடர்கின்றனர்.

இதன் காரணமாக இந்த துறையில் தனியார் துறை பெரிய அளவில் பங்காற்ற முடிகிறதா? மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் சிறந்த கொள்கைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலமாக உலக அளவில் தேவைக்கு ஏற்ப அதிகமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ அறிஞர்களை இந்தியா உருவாக்கமுடியும். இந்தியாவை டாக்டர்கள் பல ஆண்டுகளாக தங்களது பணியின் மூலம் நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளன.

ஒரே இந்தியா ஒரே சுகாதாரம் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இதனால் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கும். இதனால் தரமான உட்கட்டமைப்பு என்பது பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அத்தியாவசிய சுகாதார வசதிகள் கொண்டுவரப்படும். அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories

Tech |