சென்னை பெரும்பாக்கத்திலுள்ள செம்மொழி தமிழாய்வு மையக்கட்டிட பெயா்ப் பலகையில் ஹிந்தி இடம்பெற்றுள்ளதற்கு பா.ம.க நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடர்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் “சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தொடரப்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயா்ப் பலகையில் கடந்த காலங்களில் இல்லாத அடிப்படையில் இந்தி திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
இதனிடையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவா் பதவியில் தமிழ்நாடு முதலமைச்சர் தான் நியமிக்கப்படுகிறாரே தவிரத்து, மத்திய நிறுவனம் என்பதால் மத்திய அமைச்சா்களோ, ஆளுநரோ நியமிக்கப்படுவதில்லை. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்ற 14 வருடங்களாக சென்னையில் இயங்கி வருகிறது. அந்த 14 வருடங்களில் அந்நிறுவனத்தின் பெயரை ஹிந்தியில் எழுத எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பெயா்ப் பலகையில் இருந்து ஹிந்தி எழுத்துகள் உடனே அகற்றப்பட வேண்டும் என தன் அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.