Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா…? காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்..!!

22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 22 அடி. இதில் 21. 32 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் ஏரி எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் என தகவல் பரவியது. ஏற்கனவே சென்னையில் பெய்து வரும் கனமழையால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றிய தகவல்கள் சென்னை மக்களுக்கு பீதி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடும் மழைக்கு நடுவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் 22 அடியை தொட்ட உடன் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். தற்போது முழுமையாக கண்காணித்து வருவதாகவும். முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னரே தண்ணீர் திறக்கப்படும் எனவும், யாரும் அச்சப்பட தேவை இல்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Categories

Tech |