இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி உலகக்கோப்பையில் இந்திய அணியில் இவரை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில் அணி நிர்வாகம் பெரும் ஏமாற்றம் அடைந்தது. எனவே இந்த ஆண்டு கண்டிப்பாக உலக கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று இந்தியா அணி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக வலுவான இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்து வருகின்றது.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல்வேறு அணியுடன் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி.. இந்த தொடர்களில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. மேலும் சீனியர் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த வீரரை உலக கோப்பையில் தேர்வு செய்தல் நன்றாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் இவரை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்..
இதுகுறித்து அவர் பேசுகையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் பங்கு என்பது மிக முக்கியமானது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதற்கு கண்டிப்பாக பவுலர்கள் கை கொடுப்பார்கள் என்பது என்னுடைய கருத்து. அதன்படி பார்த்தோம் என்றால், வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் அந்த ஆடுகளத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் இந்திய அணிக்கு சாதமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணியில் சீனியர் வீரர்களான புவனேஸ்வர் குமார், ஜஸ்ட் பிரீட் பும்ரா, முகமது சமி போன்ற வலது கை வேக பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது கூடுதலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது இன்னும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். எனவே கண்டிப்பாக உலக கோப்பையில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்..