Categories
உலக செய்திகள்

செமையானா திட்டம்….! வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை…. கலக்க போகும் ஸ்பெயின் திட்டம்…!!

ஸ்பெயின் நாடு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொழிலாளர்களின் மன நலனை பாதுகாக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் 8 மணி நேர வேலையை வாரத்தின் 4 நாட்கள் மட்டும் செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகளில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் 3000 முதல் 6000 தொழிலார்களை கொண்ட 200 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக ரூ. 4,32,97,25,04450 தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாஸ்பெய்ஸ் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஹெக்டர் டெஜெரோ கூறியுள்ளார். மேலும் இந்தத் திட்டமானது தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை நீக்கி உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் இந்த திட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாகவும், அவ்வாறு வரும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றும் ஸ்பெயின் தொழில் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |