Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |