நோயாளி ஒருவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது சிறுநீரகத்தில் கட்டி இருப்பது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயை சேர்ந்தவர் மனோஜ். இவர் தன்னுடைய நீரிழிவு நோய்க்கான சோதனைக்கு வழக்கமாக செல்வதைப் போன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்ததில் அவருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. மருத்துவர்கள் அவருடைய சிறுநீரகத்தில் ஒரு பெரிய கட்டி ஒன்று இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த கட்டி கேன்சர் கட்டியா? அல்லது சாதாரண கட்டியா? என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த கட்டியை அவரது சிறுநீரகத்தில் இருந்து அகற்றினால் மட்டுமே அவருடைய உடல் நலத்திற்கு நல்லது என்பதால் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேலும் திறந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்தால் அவருக்கு பிரச்சினை என்பதால், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றியுள்ளார் மருத்துவமனையின் ஆலோசகரும், சிறுநீரக மருத்துவருமான சஞ்சய் பட். அதன் பிறகு மனோஜ் அடுத்த நாளே நன்றாக சாப்பிட்டுள்ளார். மூன்றாவது நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மனோஜ் தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் தான் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.