சென்னையில் தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இங்கு புதிதாக மால்கள் மற்றும் ஹோட்டல்களும் தற்போது கட்டப்படுகிறது. அதன்படி ஒலிம்பியாவில் சென்னை நார்த் மால், ஓஎம்ஆர்-இல் போரூம் மால், ரேடிகள் சாலையில் சரவணா மால், லூலு மால், விமான நிலையத்தில் MLCP மால் போன்றவைகள் வரவிற்கிறது. இதில் OMR-ல் கட்டப்படும் போரூம் மால் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மால் 10 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட இருக்கிறது. இதற்கு FORUM ONE OMR என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மால் 11 மாடிகளுடன் கட்டப்பட இருப்பதாகவும், முதல் தளத்திலிருந்து 4-வது தளம் வரை மால் மற்றும் தியேட்டர்கள் வரவிருப்பதாகவும், 5 முதல் 7-வது தளம் வரை அலுவலகங்கள் வர இருப்பதாகவும், 8 முதல் 11-வது மாடி வரை 166 அறைகள் கொண்ட மிகப்பெரிய ஹோட்டல் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து புத்துணர்ச்சி மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதிகள் மற்றும் நீச்சல் குளங்களும் வரவிருக்கிறது. இது தொடர்பாக இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வருகிற 2024-ம் ஆண்டிற்குள் மால் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.