Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: விமான நிலைய அடுக்குமாடி கார் பார்க்கிங்…. பின்னடைந்த திறப்பு விழா….!!!!!

சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமான நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை விமானம் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளும் நிறைவடையும் சூழ்நிலையில் இருக்கிறது. ரூபாய்.250 கோடி செலவில் 2.5 லட்சம் சதுரஅடி பரப்பளவிலான வாகன நிறுத்தும் இடத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை விமானம் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக பலஅடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் மின்சார வாகனங்களுக்கான மின்சார சாா்ஜிங் வசதி முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மாடி கார் பார்கிங் இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று விமான நிலைய ஆணையகம் அறிவித்திருந்த நிலையில், இப்போது புது அடுக்குமாடி கார் பார்க்கிங் திறப்புவிழா தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பார்க்கிங்கில் பணிபுரியும் 123 ஊழியர்கள் பணி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதாலும், தீயணைப்புத்துறையினரிடம் பாதுகாப்பு தடையில்லா சான்று இன்னும் வழங்கப்படவில்லை என்ற காரணத்தாலும் திறப்புவிழா தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |