இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்துக் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகள் அறிவுறுத்தியது. ஆனால் மக்கள் அந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள் விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தின் மாஸ் அணிபவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது ஆகியவை பெருமளவு குறைந்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய நிர்வாக பயணிகளை எச்சரிக்கும் வகையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு பணியும் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சென்னை விமான நிலைய டுவீட்டர் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், கொரோனா வைரஸ் நமது நாட்டில் முழுமையாக நீங்கிவிட்டது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறையிடமிருந்து அறிவிப்பு வரும் வரையில், சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்ற கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.