தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் சிரமம் போக்கும் விதமாக 15 மண்டலங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்தில் என்ன உணவு என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.