நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை மேயர் பிரியா ராஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ஆறு வருடங்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் கூடிய விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது புதிதாக சென்னை மேயர் பதவி ஏற்றுக்கொண்ட பிரியா ராஜனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இப் புகைப்படமானது இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகின்றது.