சென்னை முழுவதிலும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வேறுபாடு வறுத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் அரசுடமையாக்க வேண்டும் என்று இளையராஜா ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி “தமிழக அரசே! இசை கடவுள் இளையராஜா அவர்களின் இசை சொத்துக்களை சூறையாடிய பிரசாத் ஸ்டூடியோ கும்பலை கைது செய்! 40 ஆண்டு காலமாக இசைஞானி பயன்படுத்தி வந்த பிரசாந்த் ஸ்டூடியோவை அரசுடைமையாக்கி இசை மியூசியத்தை உருவாக்கு” என்ற போஸ்டரில் கூறியுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற போஸ்டர்கள் சென்னை முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.