Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் வார்டுகளை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பார்த்திபன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டத்தில் வார்டுகள் பிரிக்கும்போது வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றும் மண்டலம் வழியாக பிரிக்கக் கூடாது என்று கூறி இந்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள வார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 50% பிரித்து பெண்களுக்கு வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |