தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 14-ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் 14-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதனால் இரவு 9:40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதாவது ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும்.
மேலும் டிசம்பர் 17, 24, 31 ஆகிய தேதிகளில் 9.25 மணிக்கு புறப்படும். சென்ட்ரலில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்படும் வாராந்திர விரைவு ரயில் மறுநாள் காலை 11:25 மணிக்கு சாய் நகர் சீரடி சென்றடையும். இந்த ரயில் டிசம்பர் 14-ஆம் தேதி காலை 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதேபோல் டிசம்பர் 21, 28 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.20 மணிக்கு புறப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.