Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! “200 வார்டுகளில் சுத்தம் செய்யும் பணி”….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ” ‘பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்’ என்ற தலைப்பின் கீழ் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றது.

தேனாம்பேட்டை லூத் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் மேயர் பிரியா கலந்து கொள்கிறார். மாநகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தளங்களின் வெளிப்புறம், ரயில் நிலையங்களின் வெளிப்புறம், உட்புறம், சுற்றுலாத்தலங்கள், நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு போன்ற பகுதிகளில் தீவிர தூய்மை பணிகள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |