தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை கொளுத்தி வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் சிரமப்படலாம். எனவே சென்னையில் மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாநில அரச கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 1070, 1077 சென்னை மாநகராட்சி, 1913 944 5869848 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும், TNSMART என்ற செயலியை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.