தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். ஊரடங்கு பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் 75 நாட்களுக்கு பிறகு இரண்டாவது அலையின் பாதிப்பு எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக இது சாத்தியமாகி உள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.