சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக தான் இருக்கும்.முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது சென்னையில் சாலை மூடல்கள் மற்றும் ஸ்டேட் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள உதவியாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு roadease என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.
போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு பணிகளை எளிதாக போக்குவரத்து காவலர்கள் சாலையின் ஒரு வழியை மூடுகிறார்கள் அல்லது வேறு சாலையை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்,மாற்றங்களை பற்றி பத்திரிகை செய்திகளை வெளியிடப்பட்டாலும் சமூக ஊடகத்தில் தெரிவித்தாலும் பயனர்கள் அறிந்து கொள்வதில் சிக்கல் உள்ளதால் இந்த புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.