சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னை பெருநகரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியான காவல் கூடுதல் ஆணையர் ஒருவர் உட்பட 70 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டு தனிமையில் உள்ள அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பெருநகர காவல்துறை முன்னெடுத்து வருகின்றது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.