Categories
மாநில செய்திகள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு நீங்க போகணுமா?…. முதல்ல இதை பண்ணுங்க….!!!!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16- மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்.. 16- மார்ச் 6 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புத்தக கண்காட்சியில் பங்கேற்பவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டுகளை பெறலாம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு bapasi.com என்ற இணையத்தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 10 ரூபாய் டிக்கெட் வீதம் 19 நாட்கள் பதிவு செய்யும் அடிப்படையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் போதும் நேரில் வந்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று பபாசி சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |