Categories
மாநில செய்திகள்

“சென்னை தினம்” மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…. குஷியில் மக்கள்…..!!!!

சென்னை தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி கடந்த 1639-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டு தற்போது 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சென்னை மாநகரம் பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்வடைந்து தற்போது அனைத்து மக்களையும் வாழ வைக்கக்கூடிய ஒரு நகரமாகவே திகழ்கிறது. இதனால் தான் சென்னையை வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் 2 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய 2 தினங்களுக்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சென்னையின் தொன்மையான வரலாற்று புகைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, பாரம்பரியமான நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனையடுத்து இணையதளம் மூலமாக குறும்படம், புகைப்படம் மற்றும் ஓவியம் போன்ற போட்டிகளை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதள போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |