Categories
மாநில செய்திகள்

சென்னை தான் மாஸ்…. சர்வதேச அளவில் 8-வது இடத்தில் சென்னை ஏர்போர்ட்….!!!!

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையம் ஆகும். கடந்த 2005 -ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1,400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் விமான நிலையங்களில் செயல்பாடுகள் குறித்து லண்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் சர்வதேச அளவில் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கிய விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை 8-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் சென்னையை தவிர மற்ற எந்த விமான நிலையங்களும் இடம் பிடிக்கவில்லை.

Categories

Tech |