Categories
மாநில செய்திகள்

“சென்னை-ஜெய்ப்பூர்” ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு வழக்கம் போல் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைந்த அளவில் இருப்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களில் மாற்றம் செய்யப்படுவதோடு, சில ரயில்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னையில் இருந்து மாலை 5:40 மணி அளவில் கிளம்பும் ஜெய்ப்பூர் ரயில் தாமதமாக மாலை 6:30 மணி அளவில் கிளம்பும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |