சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அதனைப் போலவே சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 3.45 மணிக்கு செல்லும் ரயில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.