Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் -பிலாஸ்பூர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பிலாஸ்பூர் வரை செல்லும் வாராந்திர ரயில் தற்காலிகமாக நாக்பூர் சந்திப்பில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனவும் பிலாஸ்பூரில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாக்பூருக்கு மாலை 3.24 மணிக்கு சென்றடையும்.

பின்னர் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு காலை 7.19 மணிக்கும் வாட்ஷாவுக்கு 7.38 மணிக்கு பதில் 7.42 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |