ஐபிஎல் மெகா ஏலமானது வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் IPL-ன் அனைத்து 10 அணிகளும் கலந்துகொண்டு வலுவான வீரர்களை தேர்ந்தெடுக்கும். இந்த வருட IPL-யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். இவற்றில் கோடிக்கணக்கான ரூபாயில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி BCCI அறிவிப்பின்படி, 4 வீரர்களாகிய தோனி 12 கோடி, மொயின் அலியை 8 கோடி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடிக்கும் CSK தக்கவைத்துள்ளது. இந்த வருட ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK க்கு 48 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது .
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏலம் தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டமானது நடைபெற இருப்பதால், இதற்காக CSK அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜனவரி 28 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அதனை தொடரந்து அடுத்த 10 வருடங்களை மனதில் வைத்து அதற்கான அணியை தயாரிக்கும்படி இக்கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் CSK ஹெட் கோச் பிளெமிங் போன்றோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இதன் காரணமாக அதிகமாக இளம் வீரர்களை அணியில் எடுப்பதற்கு CSK அணியானது திட்டம் போட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த வருட ஏலத்தில் இதற்கு முன்பு CSK அணியில் தொடக்க வீரராக திகழ்ந்த தென்னாப்பிரிக்கா அணி வீரர் டு ப்ளசீஸை மீண்டும் அணியில் எடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் வரை CSK அணியில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்கள் சான்டனர், வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், ஹாசில்வுட், மார்க் வுட், லுங்கி இங்கிடி போன்றோரை மீண்டும் ஏலத்தில் எடுத்து அணியில் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த வருடமும் CSK அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.