தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அதன்படி ஜூன் 20-ஆம் தேதி முதல் உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வளாகத்தில் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகிறது. விரைவில் அரசு அலுவலகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.