Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி புதிய சாதனை… மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ்…!!!!!

சென்னை ஐஐடி மாற்று திறனாளிகளுக்காக செயற்கை முழங்கால் அறிமுகம் செய்துள்ளது.

முழங்கால் மேல் பகுதியை இழந்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மையான செயற்க்கை  முழங்காலை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிமுகம் செய்திருக்கிறது.கதம் என அழைக்கப்படும் இந்த மேட் இன் இந்தியா தயாரிப்பு, சொசைட்டி ஃபார் பயோமெடிக்கல் டெக்னாலஜி (SBMT) மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, முழங்காலுக்கு மேல் உள்ள செயற்கை உறுப்புக்கான பாலிசென்ட்ரிக் முழங்கால் ஆகும்.

முழங்காலின் மேல் பகுதி வரை இழந்தவர்கள் எளிதாக நடக்க செய்வதே கதம் சாத்தியமாகியிருக்கிறது. நடை மட்டுமின்றி, சமூகப் பங்கேற்பு,கல்வி பயிலுதல், வாழ்வாதார வாய்ப்புகள், ஒட்டுமொத்த உடல்நலம் போன்றவற்றின் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கதம் இன்று தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், ஐஏஎஸ், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி ஆசிரிய தலைவரான பேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன், இதர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சேர்க்கை முழங்கால் இடது முழங்காலின் மேல் பகுதி வரை துண்டிக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் குறுகிய மற்றும் நீண்ட மூட்டுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.  நான்கு கம்பிகளுடன் கூடிய முழங்கால் மூட்டு இருப்பது பயனர்கள் நிகழ்வு நீட்ப்பிற்க்கு ஏற்றதாக அமைந்துள்ளது.மேலும் அதிக வலிமை கொண்ட பொருட்களால் ஆனது: அலுமினியம் அலாய்- Al 6061 T6, எவர்சில்வர்- SS304 பயனரின் தேவையைப் பொறுத்து நிலைத்தன்மையை சரிசெய்து கொள்ள முடியும்.

வெவ்வேறு நடை வேகங்களுக்கு ஏற்ப உராய்வு கட்டுப்பாட்டை சரிசெய்யும் வசதி 4-கம்பிகளுடனான வடிவியல் (இந்திய காப்புரிமை எண். 338006) சீரற்ற நிலப்பரப்பு, சீரமைக்கப்படாத தரை ஆகியவற்றில்கூட உறுதியான நிலைத்தன்மையை வழங்குகிறது.அதிகபட்ச முழங்கால் வளைவை 160 டிகிரி அல்லது அதற்கு மேலும்கூட அளிக்கிறது. (அதிகபட்ச வரம்பு சாக்கெட்டில் உள்ளது) வெவ்வேறு நிலப்பரப்புகளிலும், செங்குத்தான சரிவுகளிலும் பயனர்கள் நடத்து செல்லும்போது சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எல்லாவற்றையும் விட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 ஆயிரத்துக்குள்ளாகவே கிடைக்கும் என்பது தான் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Categories

Tech |