சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி திரு.சஞ்சய் பானர்ஜி வரும் 4ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி திரு.ஏபி. ஷாகி பதவிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு. சஞ்சய் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி திரு.சஞ்சய் பானர்ஜி வரும் 4ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.