Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சென்னையை அடுத்து மதுரையில் தான் அமைந்துள்ளது”…. அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட செவித்திறன் பரிசோதனை அறை….!!!!!

மதுரை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை 20 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அறை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் தினகரன் தலைமை தாங்க மருத்துவமனை டீன் ரத்தினவேல் திறந்து வைத்தார்.

அப்பொழுது துறை தலைவர் தினகரன் பேசியதாவது, தென் மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட செவித்திறன் பரிசோதனை அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் நோயாளிகள் அமரும் வகையிலும் மற்றொரு அறையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் வகையில் இரு அறைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

இதன் வாயிலாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் பரிசோதனை முடிவுகளை துல்லியமாக பெற முடியும். மேலும் பெரியவர்கள் வரை செவித்திறன் பரிசோதனை செய்யலாம். இந்த செவித்திறன் பரிசோதனையானது சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்தான் அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |