சென்னையில் சுரங்க பாதைகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன.
சென்னையில் ஏற்கனவே பெய்த தொடர் மழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் பல்வேறு சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி பயன்படுத்த முடியாமல் இருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 154 இடங்களில் தேங்கியிருந்த மழை மழை நீரையும், கனமழையால் முறிந்து விழுந்த 579 மரங்களையும், முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதென்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தேங்கியிருந்த மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.